அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்! வாகன ஓட்டிகள் அவதி!
government bus Citizens peoples road blocked protest
திருப்பத்தூர், ஆம்பூர் தாலுக்கா பாப்பனபள்ளி ஊராட்சி பகுதியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த சில தினங்களாகவே குடிநீர் வழங்கவில்லை. இது குறித்து ஒன்றிய குழு அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வாணியம்பாடி-பேரணாம்பட்டு சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து கொண்டு அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் பேசினர்.
இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளே சிறைபிடித்து அலுவலகத்தை பூட்டினார்.
மேலும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் தொழிற்சாலை பேருந்துகள் போன்றவை சாலையில் அணிவகுத்து நின்றன.
இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களிடம் உமராபாத் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
government bus Citizens peoples road blocked protest