அண்ணா மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து! முதலமைச்சர் வருகையால் அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


சென்னையில் அண்ணா மேம்பாலத்தின் குறுக்கே அரசு பேருந்து ஒன்று ஓட்டுநர்களின் தவறால் சிக்கிக்கொண்டது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு வரும் பாதை என்பதால் போலீசார் பொன்விழா கண்ட மேம்பாலத்தை அவசரமாக இடித்து பேருந்தை மீட்டுள்ளனர். 

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பூவிருந்தவல்லியை நோக்கிச் சென்ற 25- ஜி தடம் எண் கொண்ட பேருந்து பகல் 12 மணியளவில் அண்ணா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. 

இந்த பேருந்து வடபழனி நோக்கி செல்லும் இரக்கத்தில் திரும்பிய போது, ஓட்டுநரின் கவனக்குறைவால் மேம்பாலத்தின் பக்க சுவற்றுக்கு இடையே பேருந்து வசமாக மாட்டி கொண்டது.

பின்னர் ஓட்டுநர் எவ்வளவு முயற்சி செய்தும் பேருந்தை வெளியே எடுக்க முடியவில்லை. சுமார் 12 - 1 மணி அளவில் முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு அந்த வழியாக செல்வதாக வாக்கி டாக்கிகளில் அறிவிப்பு வந்தது. 

அதனை அடுத்து காவலர்கள், என்ன செய்வது என தெரியாமல் பதற்றம் அடைந்தனர். நேரம் கடந்தும் காவலர்களுக்கு வேறு வழி தெரியாததால், பொன்விழா கண்ட அண்ணா மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்களை போலீசார் சுத்தியல்களைக் கொண்டு உடைக்க தொடங்கினர். 

இடிக்கப்பட்ட பின்பு பேருந்து மீட்கப்பட்டது. அதற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு அவ்வழியாக கடந்து சென்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government bus stuck flyover


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->