மீண்டும் மீண்டுமா? - விழுப்புரம் அருகே கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்.. பயணிகளின் கதி என்ன?
government bus wheel run before bus in vilupuram
கடலூர் மாவட்டத்தில் உள்ள, பண்ருட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து ஒன்று நேற்று கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை கடலூர் அருகே தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவர் ஓட்டினார்.
மேலும், இந்தப் பேருந்தில் பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்த குபேரசந்திரன் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் பேருந்தில் குறைந்த அளவிலேயே பயணிகள் இருந்தனர். இந்த நிலையில், இந்தப் பேருந்து தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் பகுதியில் வந்துக் கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் இடது புற முன் பக்க சக்கரம் கழன்று சாலையில் ஓடியது.
இதனால் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறு மாறாக ஓடியதால் பயணிகள் அனைவரும் பயத்தில் கத்திக் கூச்சலிட்டனர். உடனே பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையோர தடுப்பு சுவரை அணைத்தபடி பேருந்தை நிறுத்தினார்.
ஓட்டுனரின் செயலால் பேருந்தில் பயணம் செய்த பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
government bus wheel run before bus in vilupuram