அரசு ஊழியர்களுக்கான சம்பள தேதியில் மாற்றம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை ஒவ்வொரு மாதத்தின் கடைசி தேதியில் விடுவித்து விடுவது வழக்கம். அதன்படி 30 அல்லது 31-ம் தேதி ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளப் பணம் வரவு வைக்கப்படும். 

இந்த நிலையில், நடப்பு மார்ச் மாதத்திற்கான சம்பளம், வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக இந்த மாத இறுதியில் வரவு வைக்கப்படாது என்றும் இரண்டு நாள் தாமதமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- "தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் மற்றும் 7.05 லட்சம் ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இந்த ஆண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 அன்று வரவு வைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government employees march month salary paid april 2 for Annual accounts close


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->