அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள்...காய்ச்சலால் அனுமதிக்கப்படும் குழந்தைகள்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொது மக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. மழை , வெயில் என  பருவநிலை மாறுபாட்டின் காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு வைரஸ் காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்பும் கண்டறியப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், காய்ச்சல் வார்டில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 100க்கு மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மொத்தம் 300 படுக்கைகள் காய்ச்சல் வார்டில் உள்ளனர். இந்த படுக்கைகள் முழுவதும் நிரம்பியதால் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government hospitals admited childrens for fever


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->