பரபரப்பு... அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் கெட்டுப்போன முட்டைகள்!
government school lunch Rotten eggs
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு உடன் முட்டை கட்டாயமாக வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரம் தோறும் 92 ஆயிரம் முட்டைகள் வழங்கப்படுகின்றன.
மொடக்குறிச்சி தாலுகாவில் 126 பள்ளிகளும், கொடுமுடி தாலுகாவில் 90 பள்ளிகளும் வாரம் தோறும் முட்டை பெருகின்றன. இதில் பல பள்ளிகளில் உள்ள மதிய உணவு மையங்களில் கடந்த புதன்கிழமை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக மதிய உணவு ஊழியர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகளும் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
இதனால் கடந்த 3 நாட்களாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை வழங்கப்படவில்லை. மொடக்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சுமார் 1115 முட்டைகள் அழகிய நிலையில் கிடந்தன.
இது தொடர்பாக அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அழுகி இருந்த முட்டைகளின் மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச் சென்று பின்னர் முட்டை சப்ளை செய்த நிறுவனத்திடம் நல்ல முட்டைகளை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
government school lunch Rotten eggs