கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் முடிவை அரசு திரும்ப பெறுகிறதா?
government withdraw decision of Pen memorial statue
கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் முடிவை அரசு திரும்ப பெறுகிறதா?
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 80 கோடி செலவில் 134 ஆதி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதனால், சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற்றது. பல அரசிய கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிருப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசு சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது. இதற்கு மத்திய அரசு சுற்றுச் சூழல் அமைச்சகம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இதற்கிடையே கடலில் பேணா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த நிலையில், மெரினா கடற்கரையில் அமைக்க உள்ள பேணா நினைவுச்சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
government withdraw decision of Pen memorial statue