"கருணாநிதி மாடல்" ஆட்சி வேண்டும்..!! மு.க ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் கடிதம்..!!
Govt Employees Letter to MKStalin for Karunanidhi Model Govt
கடந்த டிசம்பர் 16ஆம் தேதி சென்னை தலைமைச் செயலக அலுவலகத்தில் நடைபெற்ற தலைமைச் செயலக ஊழியர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சி வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர். அதே போன்று அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கருணாநிதி மாடல் ஆட்சியை எதிர்பார்க்கிறோம் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலக ஊழியர் சங்க தலைவர் வெங்கடேசன் அனுப்பியுள்ள கடிதத்தில் "தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது கடந்த 2009 ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதன் காரணமாக நீண்ட நாட்கள் மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார்.
அவ்வாறு இருந்த போதும் மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்தியதை அறிந்ததும் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளரை அழைத்து அகவிலைப்படி உயர்த்துவது தொடர்பான கோப்புகளை தயார் செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவித்தார். கலைஞர் கருணாநிதி போன்ற முதல்வரை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு கருணாநிதி மாடல் ஆட்சி தான் வேண்டும்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் கலைஞர் கருணாநிதியின் ஆட்சி வேண்டுமென தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தி வருகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கை படி பழைய ஓய்வூதி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
English Summary
Govt Employees Letter to MKStalin for Karunanidhi Model Govt