என்.எல்.சி சுரங்கம்-3க்கு எதிரான தீர்மானத்தை ஏற்க அரசு அதிகாரிகள் மறுப்பு.!!
Govt officials refuse to accept resolution against NLC Mine3
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற அதிகாரிகள் மறுத்ததால் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வளையமாதேவி பகுதியில் கால்வாய் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயிகளும் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வளையமாதேவி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் என்எல்சி நிறுவனம் மூன்றாவது சுரங்க விரிவாக்க பணியை மேற்கொள்ளக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற கோரி கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். இதனை தமிழக அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் அங்கு கூடியிருந்த கிராம மக்களும் இளைஞர்களும் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
English Summary
Govt officials refuse to accept resolution against NLC Mine3