குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள்! தமிழக முதலமைச்சரின் உடனடி நடவடிக்கையால் மீட்பு! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சரின் உடனடி நடவடிக்கையால், குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த 26 பேர், குஜராத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பிய போது பேருந்து வெள்ளத்தில் சிக்கியது.

இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கையால் 26 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு குஜராத்தின் பாவ் நகரில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக அயலக தமிழர் நலன் ஆணையரகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், மீட்கப்பட்ட 26 பேரும் ரயில் மூலம் வரும் 1ம் தேதி காலை சென்னை வர உள்ளதாகவும் அயலக தமிழர் நலன் ஆணையரகம் தகவல் தெரிவித்துள்ளது.


திராவிட மாடல் அரசுக்குப் பெருமை - அமைச்சர் தங்கம் தென்னரசு 

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் கீழடியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், ₹18.8 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 

பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிர கண்டு களிக்கின்றனர்.

இந்நிலையில், ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி  தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை என்று, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Flood TN People Bus CMStalin action


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->