ஏழு மாவட்டங்களில் சத்தம் அடித்த வெயில்..!
heat century in seven districts in tamilnadu
வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிக்காலம் தொடங்கியது. இந்தப் பனிக்காலத்தில் அதிகாலை நேரங்களில், சாலைகளில் மூடுபனி தென்பட்டது. பொது மக்களுக்கு இதமான சூழலும் நிலவியது.
தற்போது, பனிக்காலம் முடிவடைந்து, வெயில் காலம் தொடங்கி விட்டது. இந்த நிலையில், ஈரோடு, மதுரை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் வெயில் இன்று சதமடித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக, ஈரோட்டில் 103 டிகிரி பாரன்ஹீட், கரூரில் 102 டிகிரி பாரன்ஹீட், மதுரையில் 101 டிகிரி பாரன்ஹீட், திருப்பத்தூரில் 101 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட அதிகம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
heat century in seven districts in tamilnadu