மக்களே வெளியில் போகாதீங்க.. கொளுத்தப்போகும் வெயில்..!
heat increase in tamilnadu
தமிழகத்தில் கோடைக்கலாம் ஆரம்பமாகி இப்போது வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதம் கடைசியில் இந்த நிலை உருவாகி, மே மாதம் இறுதி வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று மட்டும் ஈரோடு, கரூர், மதுரை, வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 101.48 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 31-ந்தேதி வரையில் அதாவது, அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அடுத்த 5 நாட்களில் வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 102.2 டிகிரி (39 செல்சியஸ்) முதல் 105.8 டிகிரி வரை பதிவாகக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
இதேபோன்று, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலியில் 98 டிகிரி முதல் 102.2 டிகிரி வரை பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 98 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 102 டிகிரிக்கு மேல் பதிவாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கலாம்" என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
heat increase in tamilnadu