பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்ததவு.!
High court ordered to inspect higher officials property in school education department
பள்ளிகல்வித்துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் சொத்து விவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இந்த இடமாறுதலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இடமாறுதல் என்பது அரசின் நிர்வாக தேவைக்காக நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் பள்ளிகல்வித்துறையில் உள்ள குரூப் ஏ, குரூப் பி பிரிவு அதிகாரிகளின் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்க்க வேண்டும் என்றும், அதில் மாறுதல் இருந்தால், சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், நிர்வாகிகளின் சொத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
பள்ளி கல்வித்துறையில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க, போதுமான அளவில் காவல்துறையினரை ஒதுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு டேவிட் லியோ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
English Summary
High court ordered to inspect higher officials property in school education department