"ஓசி" என்று விளையாட்டுத்தனமா பேசினேன் - மழுப்பிய பொன்முடி..!
higher educational minister press meet
திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற ஒரு வாக்குறுதியை அளித்தது.
ஆட்சிக்கு வந்தபின் திமுக அரசு 'பெண்களுக்கு இலவச பயணம்' என்பதை நிறைவேற்றியது. அதன்படி தமிழகத்தில் சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது.
இந்த அறிவிப்பு வெளியானது முதல், பேருந்தில் இலவசமாக பயணம் செய்த பெண்களை, நடத்துனர், ஓட்டுனர் அசிங்கமாக நடத்துவதாகவும், மற்ற சக ஆண் பயணிகளும் ஓசியில் பயணம் செய்து வர உங்களுக்கு எதுக்கு இருக்கை என்று அவமானப்படுத்துவதாக பல புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில், அண்மையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு கூட்டத்தில் பேசியதாவது, 'உங்களுக்கு குடும்ப அட்டைக்கு 4,000 ரூபாய் கொடுத்தாங்க; வாங்குனீங்க தான ஏன் அமைதியா இருக்கீங்க..வாய திறங்க; இப்போ பேருந்துல எப்படி போறீங்க, எல்லாரும் 'ஓசி' பேருந்துல போறீங்க' என்று பேசிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்முடியிடம், சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்த அவர், ‛நான் விளையாட்டுத்தனமாக பேசியதை அனைவரும் பெரிதாக்குகிறார்கள், வேறு எந்த எண்ணத்திலும் நான் பேசவில்லை. அதை பெரிதுபடுத்த தேவையில்லை' என்று மழுப்பலாக தெரிவித்துள்ளார்.
English Summary
higher educational minister press meet