திருப்பத்தூர் மாவட்டம்! புயல் காற்றுடன் பலத்த மழையால் வீடு இடிந்ததில் சிறுமி பலி.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வீடு இடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

அசானி புயல் காரணமாக நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய சூறைக் காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது.

இந்த பலத்த சூறைக் காற்றினால் விஷமங்கலம் கிராமத்தில் கூரைகள் காற்றில் பரந்துள்ளது. மேலும் கொட்டகையின் மீது வேரோடு மரம் சாய்ந்ததில் பசு மாடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நாட்டறம்பள்ளி அருகே செத்தமலை கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் கிருஷ்ணா பாலு என்பவரின் கூரைவீட்டின் மேல் மரம் விழுந்ததில் வீட்டின் சுவர் இடிந்து அவருடைய மகள் தேவிகா (வயது 6) மீது விழுந்துள்ளது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

House collapses due to heavy rain girl died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->