மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்து நீலாங்கரைக்கு அருகில் உள்ள க கானத்தூர் பழைய கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிபகுதியை சேர்ந்தவr பரத்துடு. வயது 52.

இவர் தனது குடும்பத்தோடு பண்ணை வீட்டில் தங்கி பராமரித்து வந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த இவர் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பரத்துடு, தனது மனைவி சுஜாதாவின் கழுத்தை புடவையால் இறுக்கி நெரித்து கொலை செய்தார்.

அதன்பின்னர் அவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மயங்கிய நிலையில் கிடந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் மற்றொரு சம்பவம் குன்றத்தூரை அடுத்துள்ள காலடிப்பேட்டை அம்பேத்கார் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்.இவர் வயது 45. இவர் மனைவி அலமேலு, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ரமேஷ் வீட்டில் ஏற்பட்ட தகராறில் கோவமேடைந்து அங்கிருந்த கடப்பாரையால் அலமேலுவின் தலையில் அடித்துக் கொன்றார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த ரமேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husbands kill wife in chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->