இ.பி.எஸ்.யிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும்.. நயினார் நாகேந்திரன் புதுகணக்கு!
If you talk directly to EPS, the alliance will be formed Nainar Nagendran New Account
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க. சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவிக்கையில்.அப்போது அவரிடம், திருப்பரங்குன்றம் பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் சோதனை நடப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்றும் ரைடு நடத்தி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார் . மேலும் பேசிய அவர் அ.தி.மு.க.வினர் தொடர்புடைய வீட்டில் மட்டும் ரெய்டு நடக்கவில்லை என்றும் . தி.மு.க.வினர் வீட்டிலும் நடக்கிறது என கூறிய நயினார் நாகேந்திரன் யார் யார் வீட்டில் பணம் இருக்கிறது என வருமானவரித்துறை நினைக்கிறதோ அங்கு ரெய்டு நடக்கும் என்றும் நாளை உங்கள் வீட்டில் கூட ரெய்டு நடக்கலாம்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
If you talk directly to EPS, the alliance will be formed Nainar Nagendran New Account