வீடியோ கால் பேசும் போதே விபரீதம்.! மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
Illegal video call problem in ayanavaram
சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள பாபு என்பவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இத்தகைய நிலையில் பாபு வேலைக்கு சென்ற நிலையில் ஷர்மிளாவுக்கு வீடியோ கால் செய்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த சர்மிளா இது குறித்து காவல் துறைக்கு தகவல் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Illegal video call problem in ayanavaram