அண்ணனாக நான் இருக்கிறேன்.. கொலை செய்யவும் தயங்காதீர்கள்..! அதிர்ந்துபோன அரங்கம்.. விசில் சத்தம்.!!
in chennai DGP Ravi speech about girl safety
தற்போதுள்ள காலகட்ட சூழ்நிலையால் பெண்கள் பல விதமான பிரச்சனைகளுக்கு உள்ளாகி வரும் நிலையில். பெண்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் காவலன் செயலி உருவாக்கப்பட்டு., இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்., சென்னையில் இருக்கும் கோடம்பாக்கம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபெற்ற நிலையில்., இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி ரவி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டி.ஜி.பி ரவி., " காவலன் செயலி பயன்பாடு இன்னும் எளிதாக சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளது என்றும்., இதனைப்போன்ற மாற்றம் காவல்துறையிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறார்களின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வோர் மற்றும் பகிர்வோர் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்., இரண்டு கல்லூரி மாணவிகள் தன்னிடம் நேரடியாக வந்து ஆபாச படங்கள் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டனர்.
மேலும்., ஹைதராபாத் சம்பவத்தை மேற்கோள்கட்டி., இனி பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க இயலாது என்றும்., பெண்கள் என்பவர்கள் யானையுடைய பலத்திற்கு ஒப்பானவர்கள் என்றும் தெரிவித்தார்.
யாரேனும் உங்களை சீண்டும் பட்சத்தில் அடி., உதை மற்றும் குத்துபோன்றவற்றை செய்யுங்கள். தற்காப்பிற்காக கொலையை கூட செய்யுங்கள்.. இதற்கு சட்டம் உள்ளது என்று தெரிவித்தார். இதனை கேட்ட மாணவி செல்வங்கள் கைதட்டல் மற்றும் விசில் என்று அரங்கத்தை அதிர வைத்தனர். தைரியமாக இருங்கள்., உங்களுக்காக அண்ணனான நான் இருக்கிறேன் என்று தெரிவித்தது மாணவிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai DGP Ravi speech about girl safety