இனி சில்லறைக்கு நோ டென்ஷன் : பேருந்தில் யுபிஐ மூலம் பணசெலுத்தி டிக்கெட் பெறலாம்!!
In the bus you can pay for tickets through UPI
சென்னை மாநகர பேருந்துகளில் யுபிஐ மட்டும் டெபிட் கார்டுகள் மூலம் டிக்கெட் பெறும் வசதிகள் இன்று முதல் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து துறையின் இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை மாநகர பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்தும், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் , சென்னை தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்தது சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகினறன. தினசரி 3000க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தின்தோறும் லட்சக்கணக்கானோர் பயணித்து வருகினறனர்.
பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் சரியான சில்லறைகளை கொண்டு வருவதில்லை. நடத்துனரும் பணிக்கும் வரும் சில்லறைகளை எடுத்துக்கொண்டு வருவதில்லை. இதனால் பயணிகளுக்கு நடத்துனருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்தநிலை, சென்னை மாநகரப் பேருந்துகளில் யுபிஐ மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி இன்று முதல் அறிமுகம் செய்து வைத்துள்ள்ளது சென்னை மாநகர போக்குவரத்து கழகம். ஈ.டி இயந்திரங்கள் மூலம் யுபிஐ மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் பெறலாம். பண பரிவர்த்தனைகள் தொடர்பாக நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தகவல்.
English Summary
In the bus you can pay for tickets through UPI