அடுத்து 20 நாட்களில் மாபெரும் போராட்டம்..மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு!
In the next 20 days there will be a big fight Declaration of Persons with Disabilities
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் நிறைவேறாத பட்சத்தில் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து அடுத்து 20 நாட்களில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டியும்,பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிகின்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வேண்டி,அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று இன்னமும் வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும்,10 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வொரு மாவட்டத்தில் பணிபுரிய மாற்றத்திறனாளி அலுவலகம் ஊழியர்களை கண்டித்தும் அவர்களே மாற்ற வலியுறுத்தி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர், அப்போது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் நிறைவேறாத பட்சத்தில் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து அடுத்து 20 நாட்களில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
English Summary
In the next 20 days there will be a big fight Declaration of Persons with Disabilities