இந்தியாவில் 82.2% குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தெரியும் - வெளியான அதிர்ச்சி அறிக்கை!
india Children Smartphones Education Social Media
கடந்தாண்டு வெளியிடப்பட்ட அசர் அறிக்கையின்படி, 14-16 வயதுடைய இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளனர்.
இந்த மாணவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை படிப்பு மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், சிறுவர்களை விட சிறுமிகள் குறைவான எண்ணிக்கையில் சொந்தமாக ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளனர்.
இதில், 90% மாணவர்கள் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.
82.2% மாணவர்கள் ஸ்மார்ட்போனை எவ்வாறு பயன்படுத்துவது என்று அறிவர்.
57% மாணவர்கள் படிப்புக்காகவும், 76% மாணவர்கள் சமூக வலைதளங்களுக்காகவும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர்.
சிறுவர்களில் 36.2% பேரும், சிறுமிகளில் 26.9% பேரும் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் மாணவர்களில் பெரும்பாலானோர் தங்கள் கணக்கைப் பாதுகாக்கும் வழிகள் குறித்து அறிந்துள்ளனர்.
English Summary
india Children Smartphones Education Social Media