திராவிடம் என்றால் என்ன தெரியுமா! விளக்கம் அளித்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! - Seithipunal
Seithipunal


இந்தியா எப்போதும் ஒருவர் ஆட்சிக்கு கீழ் இருந்ததில்லை!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் இணைக்கும் பாரதம் தொடர் திட்டம் குறித்து இரண்டு நாட்கள் கருத்தரங்கு துவங்கியது. இதனை தமிழக ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் "ஆங்கிலேயர் தான் இந்தியாவை இணைத்தனர் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. இந்தியா என்பது எப்போதும் ஒருவர் ஆட்சியின் கீழ் இருந்தது இல்லை. 1905 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வங்கதேசத்தை மதத்தின் அடிப்படையில் மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என பிரித்தனர். அந்த நேரத்தில் வ.உ.சி, பாரதியார் போன்றோர் போராட்டம் செய்தனர். 

பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு தமிழகத்தில் காமராஜர் போராடினார். அவர்கள் யாரும் எங்கோ நடக்கிறது என்ன அமைதியாக இருக்கவில்லை. இந்தியாவை தெரிந்து கொள்ள புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பாரதம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பாரதம் என்பது பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாடு. பாரதம் எப்போதும் தர்மத்தை கடைபிடிப்பதாக இருந்துள்ளது. அரசர்களே தர்மத்தை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இமயம் முதல் கடைசி கடல் வரை பாரதம் என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது.

1956 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தை மொழிகளின் அடிப்படையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பிரிக்கப்பட்டது. ஆந்திராவிலிருந்து தற்போது தெலுங்கானாவும் அரசியல் காரணங்களுக்காக பிரிக்கப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றுமையாக இருந்தவர்கள் தான் தற்பொழுது நீ, நான் என பேசி வருகின்றனர். தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான். ஆனால் தற்பொழுது திராவிடம் என்றால் தமிழ் என்று கூறப்பட்டு வருகின்றது.

சில அரசியல் கட்சிகள் நம்முடைய பார்வையை சுருக்கி விட்டனர் அரசியல் கட்சிகள் அதிகாரத்திற்காக மொழி அடிப்படையில் சாதி அடிப்படையில் சாதியில் உள்ள உள்கடப்புகளை எல்லாம் வைத்து அரசியல் செய்கிறார்கள். இந்தியா என்பது அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ஒற்றுமை தான்" என அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India has never been ruled by one person


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->