சர்வதேச பெண்கள் தின விழா.. சிறந்த பெண்மணிகளுக்கு விருது வழங்கி கௌரவித்த கல்லூரி!
International Womens Day College Awards for Best Women!
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் நடந்த சர்வதேச பெண்கள் தின விழாவில் சிறந்த பெண்மணிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் அனைத்து உலக பெண்கள் தின விழா வெல்ஸ்பேண் பவுண்டேஷன் உடன் இணைந்து ஔவையார் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை கலை அரங்கில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .இந்நிகழ்ச்சிக்கு அவ்வையார் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் அம்பிகாதேவி அவர்கள் தலைமையேற்றார். வணிகவியல் துறை தலைவர் முனைவர் wv பாலாஜி அவர்களும் இயற்பியல் துறை தலைவர் முனைவர் கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
வெல்ஸ்பன் பவுண்டேஷன் துணை மேலாளர் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் திட்ட அலுவலர் ஜூலியஸ் தூயமணி ஆழியார் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.திரு சுருளி நாதன் முதல்வர் ஓய்வு அவர்கள் பெண்கள் தின விழா கொண்டாட்டத்தை ஒருங்கிணைத்தார். பெண்கள் தின கொண்டாட்டத்தில் பத்து சிறந்த பெண்மணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பதக்கமும் நினைவு பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
சிறந்த பெண்மணிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முனைவர் சித்ரா முனைவர் நளினா முனைவர் அந்துவனேத் முனைவர் வண்டார் குழலி முனைவர் லட்சுமி பிரசன்னா முனைவர் உஷாராணி, ஸ்டோர் கீப்பர் சரளா, கே எம் கே பள்ளி துணைத் தலைவர் மகேஷ் மான்சிகா கண்ணையன், கலைச்செல்வி பவிதா, ஜாக்லின் வடிவேலன் அனைவரும் பதக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டார்கள்.

பெண்கள் தின கொண்டாட்டத்தை வணிகவியல் துறை மாணவிகள் மிகச் சிறப்பாக நடத்தினார்கள் விழா சிறப்பாக நடந்தேறி அனைவரது பாராட்டுதலை பெற்றது.
English Summary
International Womens Day College Awards for Best Women!