#திடீர்திருப்பம் | நாளைய ஆட்டத்தில் எம்எஸ் தோனி இல்லை! கேப்டன் இவரா? அதிச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


நாளை (31-ந்தேதி) 16-வது ஐ.பி.எல். திருவிழா தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை தொடங்கும் இந்த தொடரில்10 அணிகள் பங்கேற்கின்றன. 

இந்த 10 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு நாளை முதல் லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், நாளை அகமதாபாத்தில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில், காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பங்கேற்க மாட்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், வெளியான தகவலின் படி எம்எஸ் தோனி நாளைய ஆட்டத்தில் பங்கேற்காத பட்சத்தில் ருத்ராஜ் அல்லது ஜடேஜா கேப்டனாக செயல்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி விலகியுள்ளார். 

முகேஷ் சவுத்ரிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

மேலும், முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL2023 CSK MS DHONI Ruled Out


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->