திருமண ஆசை காட்டி மயக்கிய தனியார் ஊழியர்..மயக்க மருந்து கொடுத்து செய்த கேவலமான வேலை.! - Seithipunal
Seithipunal


மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூரில் 25 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் அங்குள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனக்கு திருமணத்திற்காக பெண் தேடி மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் வெப்சைட்டில் தனது சுய விவரங்களை பதிவு செய்துள்ளார்.

அதைப் பார்த்துவிட்டு ஒரு இளம் பெண் அவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதிலிருந்து அந்தப் பெண்ணுக்கும் ராகுலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பல நாட்களாக பேசிய இவர்கள் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி இருவரும் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் சந்திக்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண் ஹோட்டலுக்கு ராகுலை சந்திக்க வந்ததும் அவர் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்துள்ளார். அதை வாங்கி குடித்து அந்த பெண் உடனே மயக்கம் ஆனதும் ராகுல் அந்தப்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபின் ராகுலின் வன்கொடுமை பற்றி அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளானார். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT employee cheat and raped women


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->