இந்திய மதிப்பில் 91 லட்சத்துக்கு குடியுரிமை; ''கோல்டன் பாஸ்போர்ட்'' திட்டத்தை வழங்கும் குட்டி தீவு..!
Citizenship for 91 lakhs in Indian currency Small island offering Golden Passport scheme
உலகின் மூன்றாவது சிறிய நாடான நவ்ரு, தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு. மொத்தமாக 20 சதுர கிமீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. இந்த குட்டி தீவு வெளிநாட்டினருக்கு 1,05,000 டாலர் இந்திய மதிப்பில் ரூ.91 லட்சத்திற்கும் மேல்) செலுத்தி நாட்டின் குடியுரிமையை வழங்கும் "தங்க பாஸ்போர்ட்" திட்டத்தை தொடங்கியுள்ளது.
தற்போது பசுபிக் பெருங்கடலில் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், நவ்ரு நாட்டின் கடற்கரை பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி திரட்டுவதற்காக நவ்ரு நாடு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளதகா செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தங்க பாஸ்போர்ட் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியின் மூலம் நவ்ரு நாட்டின் 90% மக்களை மேடான இடத்திற்கு மாற்ற அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, நவ்ரு நாட்டின் குடியுரிமை இருந்தால், இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Citizenship for 91 lakhs in Indian currency Small island offering Golden Passport scheme