ஜல்லிக்கட்டு போட்டி விரைவில் விளையாட்டு போட்டியாக மாற்றம் - அமைச்சர் மெய்யநாதன்.! - Seithipunal
Seithipunal


ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு விளையாட்டாக விரைவில் மாற்ற சட்ட நடவடிக்கை என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், உலகத்திலேயே இல்லாத அளவிற்கு மதுரையில் மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.

மேலும், அடுத்தகட்டமாக ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு போட்டியாக மாற்ற விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன்பிறகு, ஜல்லிக்கட்டை விளையாட்டு போட்டியாக மாற்ற எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது குறைந்த நாட்கள் மட்டுமே  இருப்பதால் இந்தாண்டு ஜல்லிக்கட்டை விளையாட்டாக மாற்ற வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். கட்டுமான பணிகள் நடைபெற வேண்டும், என்னென்ன விதிகள் என்பதை உருவாக்கப்பட வேண்டும். விளையாட்டுத்துறையை முதலமைச்சரே நேரடியாக கவனித்து வருகிறார். தேவைக்கேற்ப சிறப்பு நிதிகளை ஒதுக்கி விளையாட்டுத்துறை மேம்படுத்தி வருகிறார்.

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னையை மாற்றுவதற்காக நிதிகளை ஒதுக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jallikattu competition will soon be converted into a sports competition Minister Meiyanathan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->