மல்லிப்பூ கிலோ ரூ.5,000..!! பிச்சிப்பூ கிலோ ரூ.2,500..!! பூக்களின் வரத்து குறைந்ததால் கடும் விலை உயர்வு..!! - Seithipunal
Seithipunal


தென் மாநிலங்களில் ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளதால் பூக்களின் விலை தற்பொழுது அதிகரித்துள்ளது. மேலும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருவதாலும் முகூர்த்த காலம் என்பதாலும் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. மேலும் சமீப நாட்களாக அதிக பனிப்பொழிவின் காரணமாக மல்லிகை பூவின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரு கிலோ மல்லிகை பூ 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று மல்லிகை பூவுக்கு பெயர் போன மதுரை மாவட்டத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று ஒரு கிலோ 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று 2,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 5,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போன்று ஒரு கிலோ கனகாம்பரம் பூ 1,500 ரூபாய்க்கும், முல்லை பூ 1,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரே நாளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சமீப காலமாக அதிக பனிப்பொழிவு காணப்படுவதால் பூக்களின் வரத்து குறைந்தது. இதன் காரணமாக மல்லிகை பூவின் விலை தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jasmine flower increased across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->