சிறை கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை.. அரசு பரிசீலிக்க வேண்டும் நீதிபதி கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பு நீதிபதியாக உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் உள்ளார். இவர் கடந்த எட்டாம் தேதி புழல் சிறையில் சோதனை நடத்தினார். அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இருப்பது போல சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கும், சிறைக்கு வரும் பார்வையாளர்களுக்கும் அறை வசதி, மின்விசிறி, தரமான உணவு உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஏற்கனவே 6 வயது வரையிலான குழந்தைகள் சிறையில் தாயுடன் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கவும், மழலையர் பள்ளிகளை தொடங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் சிறை கைதிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judge request to govt prisoners private


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->