வரும் ஜூன் 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
June 13 local holiday to ramanathapuram district
ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 13ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் ஜூன் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனையடுத்து வரும் ஜூன் 13ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன் 24ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
June 13 local holiday to ramanathapuram district