கலாஷேத்ரா பாலியல் விவகாரம்.. பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமின் வழங்கிய சைதாப்பேட்டை நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலருக்கு பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்கள் இருந்தது.

இதனையடுத்து  மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இதில், கடந்த 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கலாஷேத்திர கல்லூரியில் படித்த கேரளாவில் சேர்ந்த முன்னாள் மாணவி தொந்தரவுக்கு உள்ளானதாக அமையாது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஏப்ரல் 3ம் தேதி கைது செய்தனர்.

இதனையடுத்து பாலியல் தொந்தரவு வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் வழங்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். 

இதனையடுத்து ஹரி பத்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றம் ஹரி பத்மனுக்கு ஜாமீன் வாங்கி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திரும்பப் பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalashethra sexual harrasment case professor Hari padman get bail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->