தூக்கத்தில் பறிபோன 13 உயிர்கள்! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பெரும் சோகம்!
kallakurichi kallasrayam death shocking info june
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் 57 பேர் உயிரிழந்த நிலையில், இதில் 13 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணபுரத்தில் கடந்த 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் கள்ளக்குறிச்சி, சேஷசமுத்திரம், கருணாபுரம், மாதவச்சேரி, சிறுவங்கூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
விஷசாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் நிவாரண தொகை வழங்கவுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம், பாண்டிச்சேரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 13 பேர் தூக்கத்திலேயே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த தினத்தன்று விஷச்சாராயம் குடித்தவர்களில் 13 பேர் வீட்டிற்கு சென்று வழக்கம்போல் உறங்கியுள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன், அவரவர் குடும்பத்தினர் உடனடியாக 13 பேரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் 13 பேரும் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கள்ளச்சாராயம் குறித்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி. கோமதி தலைமையிலான கூடுதல் தனிப்படைக் குழுவினர், தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
kallakurichi kallasrayam death shocking info june