கள்ளக்குறிச்சி விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு - விரையும் அமைச்சர்கள்!
kallakurichi Karunapuram mystery death cm Order
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் 3 பேர் உயிரிழப்பிற்கு கள்ளச்சாராயம் காரணமா? என்பது குறித்து, சம்பவ இடத்திற்கு விரையும் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவின்படி கள்ளக்குறிச்சிக்கு புறப்படும் அமைச்சர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடமும், மருத்துவர்களிடமும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி :
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், மலிவான விலையில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த பத்துக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.
இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கள்ளசாராயத்தல் தான் அவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளிக்கின்றனர்.

உடனடியாக மருத்துவமனை வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இதற்க்கு மறுப்பு தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் உடல் ஆய்வு செய்த பின்னே அவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பது தெரியவரும். அதுவரை இந்த மரணத்தை கள்ளச்சாராய மரணம் என்று கூறவேண்டாம் என்று செய்தி நிறுவனகளுக்கு அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், இந்த சம்பவத்திற்கு தமிழக அரசே காரணம் என்றும், உடனடியாக கள்ளசாராயத்திற்கு எதிரான தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
kallakurichi Karunapuram mystery death cm Order