#தமிழகம் || நகைக்காக சிறுவனின் வாயை துணியால் கட்டி, பீரோவுக்குள் அடைத்து கொலை செய்த பாத்திமா என்று பெண்.!
kanniyakumkari kariya pattinam child murder
கன்னியாகுமரி அருகே சிறுவனிடமிருந்து நகையை திருடிய பெண், அந்த சிறுவனின் வாயை துணியால் கட்டி, பீரோவில் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கரியபட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த ஜான் - சகாயம் என்ற தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜான் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
மகன்களை வைத்துக்கொண்டு தாய் மட்டும் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம், விளையாடிக்கொண்டிருந்த ஒரு மகன் மட்டும் திடீரென காணாமல் போகவே, அருகில் உள்ள வீடுகளில் சகாயம் மகனை தேடி உள்ளார்.
ஒருவேளை சிறுவன் கடலில் சென்று தவறி விழுந்து விட்டானோ என்று, கடற்கரையிலும் சென்று பார்த்திருக்கிறார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று இரவு காவல் நிலையத்தில் சென்று மகன் காணாமல் போனது குறித்து சகாயம் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இன்று காலை சகாயத்தின் பக்கத்து வீட்டில் உள்ள பாத்திமா என்ற பெண்மணி, ஒரு நகையை அடகு வைக்க சென்றுள்ளது, அதில் சந்தேகம் அடைந்த கடைக்காரர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் பாத்திமாவை பிடித்து விசாரித்ததில், நகைக்காக அந்த சிறுவனை கொன்றது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்தபோது, அந்த சிறுவனை கொன்று, வாயில் துணியை வைத்து, பீரோவின் உள்ளே வைத்து பூட்டியது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து மேலும் பாத்திமாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஆத்திரமடைந்த சிறுவனின் தாய் மற்றும் உறவினர்கள், பாத்திமா வீட்டை அடித்து, உடைத்து சூறையாடி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
kanniyakumkari kariya pattinam child murder