கண்வலி கிழங்கு விலையை உயர்த்த கோரி பிரதமருக்கு மனு..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பில் குளிர்பதன குடோன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்களுடன் ஆர்.டி.ஓ சிவக்குமார், தாசில்தார் முத்துச்சாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

அப்போது அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒட்டன்சத்திரம் பகுதியில் குளிர்பதன குடோன் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். 6 மாதத்திற்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும். ஒட்டன்சத்திரம், கரூர், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கண்வலி கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. 

மேலும், இடைத்தரகர்களால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. எனவே, அதற்கான சரியான விலையை நிர்ணயம் செய்வது மத்திய அரசிடம்தான் உள்ளது. இதுகுறித்து, மத்திய வேளாண்மைத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க எம்.பிகளும் பிரதமரிடம் மனு கொடுத்துள்ளனர். விரைவில் உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanwali yam raise the price Petition to Prime Minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->