நம்பி வீட்டிற்குள் விட்ட தோழி.. தாயிடம் தகாத வேலை பார்த்த நண்பன்.! ஆபாச வீடியோ மிரட்டல்.!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கிரீன் தெருவில் பார்த்திபன் என்ற 21 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் ரத்தம் கொடுத்து வருவது வழக்கம். அங்கே நர்சாக பணியாற்றிய ஒரு இளம் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 

இவர்களது நட்பு விபரீதத்தில் முடிந்துள்ளது. அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி பார்த்திபன் சென்று வருவது வழக்கம். அப்போது அந்தப் பெண்ணின் 49 வயது தாயுடன் பார்த்திபன் அன்பாக பேசி வந்துள்ளார். ஆனால், அவரது நடவடிக்கை அந்த தோழிக்கு பிடிக்கவில்லை. 

எனவே இருவரும் தங்களது நட்பை முறித்துக் கொண்டனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த நர்ஸ் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த தோழியை சந்தித்த பார்த்திபன் தனக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடு என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண் மறுத்ததும் பார்த்திபன் நீ பணம் கொடுக்கவில்லை என்றால் உன்னுடைய தாய் குளிக்கின்ற வீடியோக்கள் என்னிடம் இருக்கிறது அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது தாயுடன் சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பார்த்திபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த நபரின் செல்போனில் நிறைய ஆபாச வீடியோக்கள் இருப்பது காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது செல்போனை பறிமுதல் செய்து பார்த்திபனை சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanyakumari men abused friend mother


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->