கலைஞர் பேனாவை உங்க பைல வைங்க! பேப்பர் கூட இல்லையே - கலாய்த்து தள்ளிய நடிகை கஸ்தூரி! - Seithipunal
Seithipunal


"கலைஞருக்கு பேனாசனை பேனா சிலை வைக்க வங்கக்கடல் தான் கிடைத்ததா? பேப்பரே இல்லாத அந்த இடத்தில் பேனாவை எதுக்கு வைக்கணும்" என்று நடிகை கஸ்தூரி கலைஞரின் பேனா நினைவு தினம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி பேசியதாவது, "நான் அதிமுகவில் உறுப்பினராக இல்லை. ஆனால் நான் எனக்கு வாக்குரிமை கிடைத்தது முதல் இன்று வரை அதிமுகவுக்கு தான் வாக்களித்து வருகிறேன்.

விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது ஒரு முறை அவருக்கு வாக்களித்து இருக்கிறேன். தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். 

மேலும் தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் போன்ற பல்வேறு திட்டங்களையும் அவர் கொண்டு வந்துள்ளார். அவர் இன்று நம்மோடு இல்லை தெய்வமாகிவிட்டார். நாம் அவரை தெய்வமாகவே வணங்குவோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகை கஸ்தூரி, "கடலில் பேனா சிலை வைப்பது முக்கியமல்ல. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பேனா பிடித்து குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். அதுதான் முக்கியம். 

கலைஞருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால் அவரின் பெயரில் நூலகங்களை திறக்க வேண்டும். அதை விட்டுவிட்டு திருவள்ளுவர் சிலையை விட ஒரு அடி அதிகமாக, கடலில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பேனா சிலை வைக்கப் போவது ஏன்?

பேனா சிலை வைப்பதற்கு வேறு இடமா இல்லை. உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். யார் என்ன சொல்ல போகிறார். வங்கக்கடல்தான் உங்களுக்கு கிடைத்ததா? அந்தப் பகுதியில் எழுதுவதற்கு பேப்பர் கூட இல்லையே" என்று கலைஞரின் பேனா நினைவு சின்னம் குறித்தும் நடிகை கஸ்தூரி விமர்சித்து பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kasthuri Shankar comment about pen statue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->