தமிழக அரசின் மதுபான கடை வாடிக்கையாளர் (குடிகாரன்) கொடுத்த அலப்பறை.! காட்டுமன்னார் கோவில் அருகே.,
kattumannarkovil some incident
காட்டுமன்னார்கோவில் அருகே மது போதையில் குடிமகன் ஒருவன், இருசக்கர வாகனத்தை நாடு ரோட்டில் சாய்த்து, அதன் மீது ஏறி உட்கார்ந்து அலப்பறை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, பட்டப்பகலில் மது போதையில் குடிமகன் ஒருவன் தனது இரு சக்கர வாகனத்தை சாலையின் நடுவே கிடத்தி விட்டு, அதன் மீது ஏறி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து போன் பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காட்டுமன்னார்கோவில் வட்டத்துக்கு உட்பட்ட எடையார் சாலையில், மதுபோதையில் சாலை நடுவே குடிமகன் ஒருவன், தனது இரு சக்கர வாகனத்தை கீழே சாய்த்து விட்டு, அதன் மீது ஏறி உட்கார்ந்து போன் பேச, அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று சாலையை கடக்க முடியாமல் நின்றிருந்தது.
இதனை வீடியோவாக எடுத்த அந்த வாகன ஓட்டி, பின்னர் பொறுமை இழந்து, இரு சக்கர வாகனத்தை அப்புறப்படுத்திவிட்டு, குடிமகனை சமாதானம் செய்து, ஓரமாக நிற்க சொல்லி விட்டு தனது நான்கு சக்கர வாகனத்தை எடுத்து சென்றார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.
English Summary
kattumannarkovil some incident