கொடூரம்! முன்விரோதம் தகராறில் மூதாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி பகுதியில் முன்விரோதம் தகராறில் மூதாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி வசந்தா . இருவருக்கும் அதே பகுதியில் வாசித்து வரும் செந்தில்குமார் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோத பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் செந்தில்குமார் மூதாட்டி வசந்தாவிடம் தகராறு செய்துள்ளார். இது பற்றி வசந்தா அளித்த புகாரின் பேரில் எம்.கே.பி நகர் போலீசார் நேற்று செந்தில்குமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் சுமுகமாக செல்லும் வழி எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் நேற்று இரவு வசந்தா வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். பின்னர் தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெயை மூதாட்டி உடலில் ஊற்றி உயிருடன் தீ வைத்ததாக கூறப்படுகிறது.

உடல் முழுவதும் தீ பறவியதால் வலியால் துடித்த மூதாட்டி வசந்தாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வசந்தாவை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி எம்.கே.பி நகர் போலீசார் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerosene on old lady and set her on fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->