பாலியல் தொல்லை புகார்., கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆனந்தன் தற்காலிகமாக பணி நீக்கம்.!
kopisettipalayam govt hospital Dr suspend
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக ஆனந்தன் என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் ஈரோட்டை சேர்ந்த திருமணமான பெண்(வயது 30) ஒருவர் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த மாதம் 22-ம் தேதி அந்த பெண் ஊழியர் பணியில் இருந்தபோது மருத்துவர்.ஆனந்தன் அவரிடம் சென்று உங்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறி, அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வருகிறது. இது குறித்து, அவர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், அந்த பெண் ஊழியர் கோபிசெட்டிபாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். காவல் துறையினர் இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவர்.ஆனந்தன் மீது மூன்று சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் என்ற பொறுப்பில் இருந்து மருத்துவர் ஆனந்தன் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டர்.
கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் மருத்துவர் கலாபிரியா தற்காலிகமாக தலைமை மருத்துவராக பணியமர்த்தபட்டார். இதற்கு மறு ஆணை பிறப்பிக்கும் வரை இந்த உத்தரவு அமல் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
kopisettipalayam govt hospital Dr suspend