தமிழகத்தை அதிரவைக்கப்போகும் மேயரின் ராஜினாமா? பரபரப்பில் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக விளங்கக்கூடிய கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 97 இடங்களை திமுகவும், மூன்று இடங்களை அதிமுகவும் கைப்பற்றியது. இதன் மூலம் கோவை மாநகராட்சி மாநகராட்சியை கைப்பற்றிய திமுக, கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா ஆனந்த் குமார் பதவியேற்றார். 

மேயர் கல்பனாவின் கணவர் திமுகவின் பொறுப்பு குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் என்றும் சொல்லப்படுகிறது.

மேயராக கல்பனா பதவி ஏற்றது முதலே, அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்த குமாரின் தலையீடு காரணமாக திமுக கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

நேரடியாகவே மேயருக்கு அண்மைக்காலமாக திமுக கவுன்சிலர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில், கோவை மேயர் கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த தனது ராஜினாமா கடிதத்தை திமுகவின் மேல் இடத்திற்கு கல்பனா அனுப்பி உள்ளதாகவும், கோவை மாநகர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இதற்காக சென்னையில் முகமிட்டுள்ள கல்பனாவிடம் திமுகவின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய கவுன்சிலர் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே இன்று கோவை மாநகராட்சியில் நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரமும் இதேபோல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயரான கல்பனா, தற்போது உள்கட்சியில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக ராஜினாமா செய்வதாக பேசப்படுவது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்வாரா? அல்லது திமுக மேல் இடம் சமாதானம் செய்து மீண்டும் அவரை மேயராக தொடர வழிவகை செய்வார்களா என்பது குறித்த செய்தி வெளியாகி விடும். 

எப்படியானாலும் ஒரு மாநகராட்சியின் மேயர் ராஜினாமா செய்தால் அது ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படும். இதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து மிகப்பெரிய அரசியல் பிரச்சாரத்தை செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai DMK mayor Kalpana may be resign coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->