கோவையில் பேருந்துக்குள் ஒழுகிய மழைநீரால் பயணிகள் அவதி!! - Seithipunal
Seithipunal


கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளதையடுத்து மாலை நேரங்களில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கோவையைச் சுற்றியுள்ள புறநகர்ப்பகுதிகளிலும் தினமும் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரிசெட்டிப்பட்டி செல்லும் பேருந்தில் உட்புறம் மழைநீர் ஒழுகியது. இதனால் இருக்கைகளில் அமரமுடியாமல் பயணிகள் நின்று கொண்டு பயணித்தனர்.

மேலும் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து கோபிச்செட்டிப்பாளையம் செல்லும் அரசுப் பேருந்திலும் மேற்கூரையில் இருந்து மழைநீர் வழிந்தவண்ணம் இருந்தது. இதனால் இந்தப் பேருந்திலும் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் நின்று கொண்டே பயணித்தனர்.

இந்நிலையில் ஒரு பயணி பேருந்துக்குள் குடையை விரித்து அமர்ந்திருந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இவ்வாறு மழைக்காலங்களில் பேருந்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதோடு மழைக்காலங்களில் பேருந்தில் கூட்டமாக இருப்பதாலும் பயணிகள் மழைநீர் வழிவதையும் பொருட்படுத்தாது இருக்கையில் அமராமல் நின்று கொண்டே பயணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai rain inside bus passengers sad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->