அரசு கொள்முதல் நிலையம் : நெல்லை தரையில் கொட்டி வைத்து காத்து கிடக்கும் விவசாயிகள்.! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம், கோவத்தகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து தற்போது நெற்பயிர்கள் அறுவடை பருவத்தை தாண்டியுள்ளதால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்ய தொடங்கியுள்ளனர். 

இந்த நிலையில், கோவத்தகுடி அரசு கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெற்பயிர்களை விற்பனை செய்ய கடந்த ஒரு வாரமாக காத்து கிடக்கின்றனர். 

மேலும் சிலர் நெற்பயிர்கள் அறுவடை பருவம் தாண்டியும் நெற்பயிர்களை அறுவடை செய்யாமல் வைத்துள்ளனர். 

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 

இதனால் அரசு விரைவில் கோவத்தகுடி அரசு கொள்முதல் நிலையத்தை திறந்து, நெற்பயிர்களை கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovaththakudi paddy farmers report


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->