கிருஷ்ணகிரி : சாலை விபத்து 3 மாத குழந்தை உட்பட5 பேர் பலி.. தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!
Krishnagiri road accident 5 peoples death TN CM announce relief fund
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஹரஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தர்மபுரி மாவட்டம் நூலஹள்ளி கிராமத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள சிந்தாமணி எனும் ஊருக்கு கூலி வேலைக்காக சுமார் 11 பேர் டிராக்டரில் பயணம் செய்துள்ளனர்.
அப்பொழுது ஹரஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்று கொண்டிருக்கும்போது தனியார் சொகுசு பேருந்து டிராட்டரின் பின்புறம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த மற்றவர்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று டிராக்டரில் பயணம் செய்த 3 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நூலஹள்ளி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Krishnagiri road accident 5 peoples death TN CM announce relief fund