ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்கள்! கண் சிமிட்டும் நேரத்தில் நேர்ந்த சோகம்!
Krishnangiri Youths happened tragedy
கிருஷ்ணகிரி, மத்தூர் அருகே உள்ள மணியாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குடியப்பன். இவரது மகன் மைந்தன் (வயது18). அதே பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகன் ஆதி (வயது 18).
நண்பர்களான இவர்கள் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்தனர். இந்நிலையில் நேற்று இருவரும் ஊத்தங்கரையில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை காண்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
இவர்கள் இரவு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி, மத்தூர் தேசிய நெடுஞ்சாலை அந்தேரிபள்ளி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மைந்தன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் மைந்தன் தலையில் காயமடைந்த சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆதியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மைந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Krishnangiri Youths happened tragedy