குற்றாலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆடி கார்!! பீதியில் அலறிய மக்கள்!
Kutralam Audi car suddenly catches fire
தென்காசி குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த ஆடி கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தென்காசி பழைய குற்றாலம் அருகே, சுற்றுலாவிற்கு வருகை தந்த கொல்லம் பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது மற்றும் அவரது மகன் ஆதில். இவர்கள் இருவரும் தமக்கு சொந்தமான ஆடி காரில் ஆயிரப்பேரி என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ஆடி கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனையறிந்து இருவரும் காரை விட்டு வெளியேறினர்.
இதையடுத்து தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தென்காசி தீயணைப்பு மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தென்காசி போலீசார், ஆடி கார் எதனால் திடீரென தீப்பற்றியது? என்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
Kutralam Audi car suddenly catches fire