புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா; தமிழ்நாடு அரசு மகிழ்ச்சி செய்தி..! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அடுத்த 06 மாதங்களுக்குள் சுமார் 86,000 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநில அரசு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; நீர் நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது என்றும், சென்னை பெருநகரப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதே போன்று மற்ற இடங்களில் 05 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும் எனவும், 03 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில்,தமிழ்நாடு முழுவதும் சுமார் 86,000 பேருக்கு அடுத்த 06 மாதங்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Land titles for 86 000 people living on unobjectionable lands Tamil Nadu government


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->