பயிர் காப்பீட்டில் இணைய காலக்கெடு முடிய இரண்டு நாட்களே உள்ளது!
Last date of joining in RPMFBY scheme in Tamil Nadu
புதுப்பிக்கப்பட்ட பிரதமர் மந்திரி பயிர் காப்பீடு திட்டம்!
தமிழகத்தில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது 2022 2023 ஆம் ஆண்டிற்கான சிறப்பு பருவ காப்பீடு பெறப்பட்டு வருகிறது.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வேளாண் நிலையான உற்பத்தியில் இயற்கை இடர்பாடுகளால் பயிர் இழப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு நிதி வழங்குதல், பண்ணை வருவாயை நிலை நிறுத்துவது மற்றும் புதிய அதிநவீன தொழில்நுட்பங்கள் பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் வருவாய் கிராமம் மற்றும் உள்வட்டத்தில் அறிவிக்கப்பட்ட பயிர்களை பயிரிடும் அனைத்து விவசாயிகளும் சேர தகுதியானவர்கள். குத்தகை முறையில் விவசாய மேற்கிலும் விவசாயிகளும் இத்திட்டத்தில் சேரலாம்.
பயிர் கடல் பெற்ற விவசாயிகள் பயிர் கடன் வழங்கிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அல்லது கூட்டுறவு வங்கியில் இதற்காக விண்ணப்பிக்கலாம். பைக் கடன் பெறாத விவசாயிகள் பொது இ சேவை மையங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இணையலாம்.
பயிர் கடன் பெறாத விவசாயிகள் முன்மொழி படிவம், சிஎஸ்சி எனும் ஒரு முறை பதிவு விண்ணப்பம், நடப்பாண்டு அடங்கல் வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் ஆதார் நகல் கொண்டு வர வேண்டும். உணவு தானிய பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதமும் வணிக பயருக்கான காப்பீட்டுத் தொகையில் 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.
சம்பா வகை நெல்லுக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைய நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மக்காச்சோளம், பருத்தி போன்ற இதர பயிர்களுக்கு அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.
English Summary
Last date of joining in RPMFBY scheme in Tamil Nadu