கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது..தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
Lent began for Christians. Special prayers in Christian churches across Tamil Nadu
சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.அவர் 3-வது நாளில் உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் பாடுகளைதியானிக்கும் வகையில் ஆண்டுதோறும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக அனுசரிப்பார்கள். இவ்வாண்டுக்கான தவக்காலம் இன்று தொடங்கியது.
இதையொட்டி, சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். வழிபாடு நிறைவு பெற்றதும், ஆலயத்துக்கு வந்திருந்த மக்களுக்கு பாதிரியார்கள் நெற்றியில் சாம்பல் மூலம்சிலுவை அடையாளமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தேவாலயங்களிலும் வழிபாடுகளும், அதிலும் குறிப்பாக இந்த 40 நாட்களுக்கு இடைப்பட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாலையில் சிறப்பு வழிபாடு களும், பிரார்த்தனைகளும் நடத்தப்படும்.
40 நாட்கள் தவக்காலத்தைதொடர்ந்து குருத்தோலை ஞாயிறும், அதன்பின்னர், இயேசுவைசிலுவையில் அறையும் நிகழ்வாகவும், சிலுவைப்பாடுகளின்போது அவர் முன்மொழிந்தவார்த்தைகள் குறித்து தியானிக்கவும் புனிதவெள்ளி அனுசரிக்கப்படுகிறது.3-வது நாளில் உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.
English Summary
Lent began for Christians. Special prayers in Christian churches across Tamil Nadu